Tuesday 15 November 2011

கம்பனிகளுக்கு காது குடையும் மன்மோகன் அரசு

இன்று கிங் பிஷெர் விமான நிறுவனத்தை பற்றி பேசாத ஊடகங்கள் கிடையாது. ஆரம்பித்தது முதல் இன்று வரை லாபமே காட்டாமல், தனது வருமான வரியில் நஷ்ட கணக்கு காட்ட, இந்த நிறுவனத்தை நடத்தி வருகிறார் மல்லையா..இந்தியாவின் மிகப்பெரும் சாராய வியாபாரி, IPL அணியின் உரிமையாளர், அழகிகளுடன் அடிக்கடி போஸ் கொடுப்பவர், இதற்கெல்லாம் மேலாக ராஜ்யசபா உறுப்பினர்...
                        இவருக்கு ஒரு நட்டம் என்றால் ஓடோடி வருகிறார்கள் விமான துறை அமைச்சரும் , நம்முடைய மாண்புமிகு மன்மோகன் சிங்கும்..கூடங்குளம் பிரச்சனை பற்றி, அங்கு வாழும் மக்களின் உண்மையான பிரச்சனைகளை பற்றி கவலை கொள்ளாத இவர்கள் , ஒரு சாராய வியாபாரியின் குரலுக்கு ஓடோடி வரகின்றனர்..இதுதான் சமத்துவமா ?இதுதான் சமுக நீதியா ? மக்களுக்கு பிரச்சனை என்றால் பொறுமையாக பதில் சொல்லும் பிரதமர் , இவரின் பிரச்சனைக்கு கவலை கொள்கிறார்..
                             நாட்டில் நடக்கும் லஞ்சம் , ஊழல் மற்றும் நிர்வாக சீர்கேடு போன்றவற்றை எல்லாம் கவலை படுவது எல்லாம் தலைவர்களின் கடமையா என்ன?

4 comments:

  1. சமூகத்திற்கு தேவையான பதிவுகள் தொடர்ந்து இட வாழ்த்துக்கள். வரும் நாட்களில் சற்று விரிவான பதிவிட வேண்டுகிறேன்.

    ReplyDelete
  2. வணக்கம், இணைப்பு கொடுத்துள்ளேன் பாருங்கள்.

    ReplyDelete
  3. நன்றி சீனிவாசன் ... தகவல்கள் திரட்டிக்கொண்டு இருக்கிறேன்.. விரிவாக எழுத ஆவலாக உள்ளேன்.. விரைவில்....

    ReplyDelete
  4. வாழ்த்துகள்,பதிவுலக பயணத்திற்கு தொடர்ந்து எழுதுங்கள்,ஆதரவு கண்டிப்பாக உண்டு.

    ReplyDelete