Wednesday 16 November 2011

பரபரப்பை தேடி....உண்மைகளையும் யதார்த்தங்களையும் மறந்து...

Breaking  News  : flash  news : அண்மை செய்திகள் :
                "Jeya reaches Bangalore Airport ", "Jeya had lunch from five start hotel at her car ", " Rahul Gandhi sit on the mud floor of a farmer's house  at village of UP", " Stray dog disturbed the practice at Budh circuit ".. என்னடா இது.. ரொம்ப முக்கியமா விஷயமா என பார்த்தால், பத்து பைசா தேராதே விஷயம்.. இதெல்லாம் ஒரு செய்தி..இதை வெளியிட ஒரு செய்தி தொலைக்காட்சி(தொல்லைகாட்சிகள் என்றும் சொல்லலாம்).. இதாவது பரவாயில்லை.. அம்பானி வீடு வாஸ்து சரியில்லையாம் , அதற்க்கு வாஸ்து நிபுணர்களின் பேட்டி வேறு.. இதுவா செய்தி ஊடகங்கள்.?? இதுவா ஒரு நாட்டு மக்களுக்கு தேவையான செய்தி??? Breaking news  என்ற பெயரில் பத்திரிக்கை தர்மத்தையே மீறி செயல் படுகின்றன,, ஒரு செய்தியை சொன்னால், மேம்போக்காக, வணிகதன்மையுடன், தனது TRP  rating  அதிகரிக்க , தங்கள் வருமானத்தை மட்டுமே குறிகோளாக கொண்டு, சாதாரண மக்களை சிறிதும் கண்டுகொள்ளாமல் உள்ளன இந்த 24  மணிநேர  தொலைக்காட்சிகள்.
                          இதுதான் பத்திரிகை தர்மமா ? நீதியா ?.. இதற்கிடையில், வாரம் ஒரு முறை, மாதம் இரண்டு முறை என்று வரும் , சில பத்திரிக்கைகள், பணம் வாங்கி கொண்டு செய்திகள் வெளியிடுகின்றன அல்லது தங்களுக்கு பிடித்த கட்சியின் அல்லது ஜாதியின் சார்பான செய்திகள் வெளியிடுகின்றன..தரம் இல்லாமல், பொறுப்பு இல்லாமல் ,செய்திகள் வெளியிடுகின்றன..
உண்மைகள் எங்கே :
   ஜெயலலிதா bagnaore  கோர்ட்டுக்கு வருகிறார் என்றால், என்ன ஊர் சுத்தி பாக்கவா ?? நாட்டை, அரசாங்கத்தை, அரசியலமைப்பை, மக்களை, நீதியை, தர்மத்தை  ஏமாத்தி , அந்த நேரத்திலயே 200 , 300  கொடிகள் ஆட்டைய போட்டு, (இப்போதைய மதிப்பில் குறைந்தபட்சம்  நான்காயிரம் கோடிகள் தேறும் ) ஒரு accused  ஆக கேள்விகளுக்கு பதில் சொல்ல வருகிறார்..இதற்க்கு இவ்வளவு பெரிய coverage ... எப்படியெல்லாம் ஒரு குற்றவாளிக்கு ஆதரவாக செயல் படுகின்றன..
            என்றைக்காவது, இவர் வழக்கு விவரம் இது, இவையெல்லாம் ஆதாரங்கள், இன்னென்ன சட்டப்ப்ரிவில் வேலைக்கு உள்ளது, இன்னென்ன தவறு செய்துள்ளார், என்ற உண்மைகளை எந்த ஊடகமாவது சொல்லியது
உண்டா ? இல்லையே ...சும்மா show  காண்பிக்க மீடியா நடத்துகிறார்கள் இவர்கள்.. இதைத்தான் இன்றைய இளைய சமுதாயம் பார்க்கின்றது... குறைந்தபட்சம், நமது நடுத்தர வர்கங்கள்..
                                                                                                                      (தொடரும்.....)

No comments:

Post a Comment