Thursday 16 August 2012

பிளவு... பிளவு.. பற்றி எரியும் இந்தியா

பெங்களூர், சென்னை மற்றும் ஹைதராபாத் தொடர் வண்டி நிலையங்களில் எங்கும் ஒரே கூட்டம்..ராமர் கோவில் கட்ட மூட்டை முடிச்சிகளுடன்  கிளம்பி விட்டர்கள என தோன்றியது..விசாரித்து பார்த்தல் அது சொந்த ஊருக்கு செல்லும் நம் மக்களளின் கூட்டம்.. என்னடா இது, எதாவது பண்டிகையா என விசாரித்து பார்த்தல், அதுவும் இல்லையாம்... பிறகு ஏன், எல்லாரும் இப்படி அடித்து பிடித்து ஊருக்கு போறாங்கன்னு கேட்டா சொன்னங்க.... இங்க எங்களுக்கு பாதுகாப்பு இல்லன்னு... என்ன கொடும சார் இது.. இவ்வளவு பெரிய ஊர்ல, கோடி மக்கள் கூடி வாழும் இடத்தில , உங்களுக்கு பாதுகாப்பு எதுக்குன்னு கேட்டா, எங்கல அடித்து போட்டா கூட கேட்க ஆளு இல்லை சொல்லறான்..
       அது சரி, இந்த நாட்டில் எவன்தான் கேப்பான்.. பாங்க்ல கொள்ள அடிச்சான்னு  5  பேரை போலிசே கொன்னு போட்டிச்சி, எவன் கேட்டான்... அப்பிடிதான் இருக்கும் இந்தியா மாதிரி நாடு.. அட அத விடுங்க, உள் குத்து பிரசனையில போலீஸ்கரன் ஒருவன் துப்பாக்கியில் சுடுறான்,... காக்கி சட்ட போட்டா ரவுடி..அதுவும் நம்மூர்ல..அதையும் எவனும் கேட்கல..உங்கள அடிச்சா மட்டும் யாரு கேப்பா... அப்படியே வாழ பழகிகொள்ளவேண்டியதுதான்...அப்படிதான் இந்த நாட்ல வாழ முடியும் பாஸ்...
          அட, நீங்களும் இந்தியர்கள்தான ?? ஒ.. உங்கள நிறைய பேர் சீனாகாரன்னு நினைசிட்டங்க போல..ஒரு வேல சீனா மேல நம்ம ஆட்களுக்கு ஒரு வெறி கிளம்பிடிசோ??? இருக்காதே.....இவனுகதன் மானம், சூடு, சொரண கெட்ட பயலுவ ஆச்சே!!!! ஈழத்தில் கொடூர கொலை நடந்த பொது, கொஞ்சம் கூட மனிதாபிமானம் இல்லாமல் கிரிக்கெட் மேட்ச் பாத்த நாடு அல்லவே இது... பிற எப்படி இவனுக வெறி பிடிச்சி கிளம்புவாணுக...நடக்காதே!!!!
      அட சங்கதி அப்படியா...ஓகோ... அங்கே கலவரம், அதனால இங்க விரட்டி அடிகிறாங்கள...அட பாவிகளா... இங்க இருக்கிரவனவது நல்ல இருக்கட்டும்..முடியாதா??? ஏன் ?? என்னது இது மதப்பிரச்சனையா????  அப்படி போடுங்கடா.... அதான, ஒரு நல்லதுக்கு ஒன்னு சேர மாட்டானுக... பாக்காத கடவுளுக்கு எதாவது பிரச்சன ன்னு சொன்ன, வீணா போன ஒரு வெட்டி கூட்டம்,  உடனே ஆரம்பிச்சி, அதுல ஒரு லாபம் தேடுவாங்க..

No comments:

Post a Comment