Tuesday, 6 March 2012

காங்கிரசை உட்கார வைத்த உத்தரப்பிரதேசம்

எங்கள் வழிகாட்டி, எங்கள் எதிர்காலம் ,எங்கள் குலவிளக்கு என்றெல்லாம் எடுத்து இயம்பப்பட்ட, ராஜா வீட்டு கன்னுக்குட்டி, இன்று என்ன செய்வது என்று தெரியாமல், வெற்றி பெற்ற முலாயம் ரௌடி கும்பலுக்கு வாழ்த்து தெரிவிதுள்ளார் ராகுல் "கெந்தி"(அட இதுதான் உண்மையான பெயர்)..
      சோனியாவும் தன் குலவிளக்கை எப்படியாவது அரியணையில் ஏற்றி விடுவது என குட்டிகரணம் அடித்து பார்க்கிறார். ஆனால் இந்த அரசியல் கத்துக்குட்டி, என்னவோ பெரிய தலைவர் ரேஞ்சுக்கு பில்ட் அப் எல்லாம் குடுத்து பார்த்தும், ஒரு மண்ணும் தேரல.என்ன செய்வது, இவன் அப்பன் வரை , காந்தி , நேரு ன்னு ஓட்ட வாங்கினாணுக..அந்த கதையெல்லாம் இப்போ பருப்பு வேகல..சரி, எம் ஜி ஆர் மாதிரி கொஞ்சம் சீன் ஒட்டி பார்த்தும் ஒரு மன்னாங்கட்டியும் நடக்கல..
  அட இதெல்லாம் அரசியல்ல சாதாரணம்பா என காங்கிரஸ் ஜால்ரா கோஷ்டி, ஜின் சக் அடிக்க ஆரம்பித்து விட்டனர். ஒரு சிலர் சில படி மேலே போய், காங்கிரஸ்க்கு இவ்வளவு கெடச்சதே எங்கள் குலவிலக்கால் தான், என தங்களையே செருப்பாலும், விளக்குமாரினாலும் அடித்து கொள்கின்றனர்...என்ன செய்வது!!!!
   நம்மால்தான் முடியல, நம்ம அக்கவையாவது பார்த்து மக்கள் ஏமாறுவார்கள என முயற்சி செய்து, இறுதில் அவரது கணவரையும் களத்தில் இறக்கி பார்த்தான் இந்த மாங்கா...அதுவும் நடக்கல..

காமராஜர் செய்தது மக்கள் தொண்டு. அதனால் வந்தார் அரசியலுக்கு.. நீ சும்மா ஏ சி ரூம்ல இருந்துட்டு, சில நேரங்களில் வந்து டகால்டி பண்ணிட்டு, நான்தான் அடுத்த பிரதமர் ன்னு சொன்ன கேக்ரவன்னெல்லாம் என்ன கேன பயலா???

No comments:

Post a Comment