Wednesday 4 April 2012

கூடங்குளம் போராட்டம் ...


          வல்லரசுக்கனவுகளில் திளைக்கும் அதிகாரிகள்,  அரசியல்வாதிகள், அவர்களது கைக்கூலிகள் அனைவருக்குமே கூடங்குள் இயக்கம் பேரதிர்ச்சியாக வந்தது. பெருமளவில் மக்கள் அணிதிரள்கிறார்கள்.  பெரிய அள்வில் வன்முறை இல்லை, ஆனால் இவர்கள் என்னவெல்லாம் செய்யக்கூடும் என்று மிரண்டு பல இரவுகள் தங்கள் உறக்கத்தையே பலர் இழந்திருக்கக்கூடும். அப்படி மிரளவைத்தது ஒரு சாதனைதான்.
நிபுணர் குழுக்களை அனுப்பி, பேச்சுவார்த்தைக்கு வருமாறு வருந்தி வருந்தி அழைத்தது இவையெல்லாம் சுற்றுச்சூழல் ஆர்வலர்களுக்கு, அனைத்துவித அரசு எதிர்ப்பாளர்களுக்கு, பெரும் மகிழ்ச்சியளித்ததும் உண்மையே.
                         ஏதோ சில வரையறைகளுக்குள்ளான  போராட்டமே என்று அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்திருக்க்லாம். ஆனால் வெளியுலகிற்கு அதெல்லாம் தெரியாத நிலையில், சூசகமாகவேனும் தெரிவிக்கப்படாத நிலையில், போராட்டம் முடங்கிப்போயிருப்பது ஒரு தோல்வியாகவே பார்க்கப்படும். அத்த்கையதொரு புரிதல் எதிர்கால மக்கள் போராட்டங்களுக்கு பின்னடைவாகக் கூட அமையலாம். சில மாதங்கள் அனைத்திந்தியாவையும் தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்கவைத்த ஒரு பெரும் எழுச்சிக்கு இப்படி ஒரு முடிவென்பது சோகமே.
                      போராட்டங்கள் நிகழ மக்களுக்கு கம்னியுச சிந்தனைகள் தேவை. அல்லது அந்த சிந்தனை உள்ளவர்கள் கட்டமைப்பு ரீதியாக, பல கட்டங்களில் மக்களுடன் நின்று , மக்களை திரட்ட வேண்டும்..மக்களுக்கு போராட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைக்க வேண்டும். அதாவது மக்களின் உணர்ச்சி நிலையை மட்டும் நம்பி களத்தில் இறங்காமல், போராட்டத்தின் அடிப்படை மற்றும் போராட்ட அவசியம் , போராட்டம் முறை , பின்விளைவுகள் போன்றவை கணக்கில் கொள்ள படவேண்டும்..
   மேலும் இந்த பிரச்சனையில் ஒட்டுமொத்த இந்தியாவும், இந்த போராட்த்திற்கு எதிர்ப்பு போல் ஒரு மாயை(உண்மையாகவும் இருக்கலாம், இந்த ஒட்டுண்ணி இந்திய  மக்கள் சிந்தனையை, முதலளிதுவதுக்கு அடகு வைத்து விட்டார்கள் அல்லவே, சில பேர் தெரிந்து, பெரும்பாலோனோர் தெரியாமல்)... மேலும் ஒரு போராட்டம் எல்லோரிடமும் பரவ வேண்டும் என்றால், அதற்க்கு ஒரு அமைப்பு தேவை.. பெரிய கட்சிகள் எதுவும் இந்த போராட்டத்திற்கு ஆதரவு தரவில்லை.. இவர்கள் ஆதரவு என்பது, இவர்களது அமைப்பு ரீதியானது மற்றும் அரசியல் ரீதியானது,, ஏனன்றால் அரசாங்கம் அல்லது அரசியலமைப்பு என்பது பிரதிநித்துவம் சார்ந்தது.. இவர்கள் அதரவு இல்லாமல் இதை பெரிதாக எடுத்து செல்ல முடியவில்லை,.. ஏன் என்றால் இது ஒரு சிறிய பகுதியின் போராட்டம் என்றுதான் பிறரால் பார்க்கப்பட்டது.. இதுதான் போராட்டத்தின் தோல்விக்கு மிக பெரிய காரணம்.. மேலும் அரசின் கையாலகாத (அதிகாரத்தை பயன்படுத்தி), பலவிதமான குற்ற சாட்டுகள்..கிறித்துவ போராட்டம் , வெளிநாட்டு சதி,..இந்து முன்னணி குண்டர்கள் அடாவடி, மேலும் பல பல...

நமக்கு தேவை... மக்களின் அடிப்படை புரிந்துணர்வு.. தங்கள் அடிப்படை உரிமை பற்றிய அறிவு.. மறக்க வேண்டாம் தோழர்களே இந்திய சுதந்திர போராட்டம் ஒரு சில ஆண்டுகளில் உருவானது அல்ல,200 ௦௦ வருட மக்கள் திரட்டல்