Monday 19 December 2011

பணம் பறிக்கும் Times of India : இந்தியாவை பிளக்க பயன்படும் அந்நிய சக்தி

 
ஒரு மிகப் பெரிய ஊடக முதலாளி, தான் நஷ்ட ஈடாக கொடுக்க வேண்டிய 100  கோடியை , கொடுக்க வழி இல்லாமல்,
பிச்சை கேட்கும் நிலையில் உள்ளது..ஆதாவது இது ஒரு மாடர்ன் பிச்சை... இத பாருங்க ...
  யாருக்கு   பிச்சை என்கிறீர்களா…. டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்குத்தான் 100 கோடி வேண்டுமாம்.  தமிழ்நாட்டில், தமிழனின் உழைப்பில் வியாபாரம் நடத்திப் பிழைக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னைப் பதிப்பு அலுவலகத்தில், மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது, செய்திகளைத் தாண்டி, மலையாள வெறி தெரிகிறது என்று தி வீக்என்ட் லீடர் இணைய தளம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.
  
தி வீக் என்ட் லீடர் வெளியிட்டுள்ள கட்டுரையையும் நேற்று இது குறித்து சவுக்கு (http://savukku.net/home1/1414-100---.html) வெளியிட்ட கட்டுரையையும் படித்துப் பார்த்தீர்களென்றால், டைம்ஸ் ஆப் இந்தியாவின் சென்னை பதிப்பு எப்படி மலையாளிகள் ஆதிக்கத்தில் திளைத்து, இதனால் நடுநிலை தவறியதோடு அல்லாமல், உண்மையை திரித்து, மலையாளிகளின் நலனை முன்நிறுத்துகிறது என்பது தெளிவாக விளங்கும்.

டைம்ஸ் ஆப் இந்தியாவை நடத்தும் அதே பென்னட் அன்ட் காலமென் நிறுவனம்தான் டைம்ஸ் நவ் சேனலையும் நடத்துகிறது.  இந்த பென்னட் அன்ட் காலமன் நிறுவனத்துக்கு சமீபத்தில் மும்பை உயர்நீதிமன்றம் ஒரு நீதிபதியின் புகைப்படத்தை தவறாக காண்பித்ததற்காக 100 கோடி ரூபாய் அபராதம் விதித்தது.  இதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றது பென்னட் அன்ட் காலமன் நிறுவனம்.  ஆனால் உச்ச நீதிமன்றம் 100 கோடியை கட்டுங்கள் பிறகு மேல் முறையீடு செய்யுங்கள் என்று உத்தரவிட்டது.
   
ஒரு பத்திரிக்கையின் சென்னைப் பதிப்பை மலையாளிகளால் நிரப்பி, செய்திகளை திரித்து, அந்தப் பதிப்பின் அலுவலகத்தில் தமிழர்களை ஓரங்கட்டியதாக செய்தி வெளியிட்டால் அவதூறாம்.  100 கோடி ரூபாய் கேட்பார்களாம்.  கருத்துச் சுதந்திரத்தை பறிக்க முயலும் டைம்ஸ் ஆப் இந்தியாவின் முயற்சிகளை முறியடிப்பதில், சவுக்கு தி வீக் என்ட் லீடர் இணைய தளத்தோடு துணை நிற்கும் என்பதை இந்த நேரத்தில் உறுதியாக சொல்லிக் கொள்ள விரும்புகிறது.  

அன்பான சவுக்கு வாசகர்களே…  தி வீக் என்ட் லீடரில் வெளியாகியுள்ள அந்தக் கட்டுரையின் தமிழ் மொழிபெயர்ப்பும், ஆங்கில வடிவமும், சவுக்கில் வெளியிடப் பட்டுள்ளது.  இதை ப்ளாக் எழுதும் சவுக்கு வாசகர்கள் அத்தனை பேரும், தங்கள் ப்ளாகில் வெளியிட வேண்டும் என்று சவுக்கு அன்போடு கேட்டுக் கொள்கிறது.    தங்கள் நண்பர்களிடமும் சொல்லி இதை வெளியிட வையுங்கள்.     எத்தனை பேரிடம் 100 கோடி கேட்கிறார்கள் என்பதைப் பார்த்து விடுவோம்.